/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
/
ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 02, 2026 04:25 AM

கடலுார்: கடலுார் புதுப்பாளையத்தில் உள்ள ஓயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனம் சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கடலுார் டிஇஎல்சி சபை போதகர் கிடியோன் ஜெபக்குமார் பங்கேற்று ஜெபம் செய்து துவக்கி வைத்தார். ஓயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவன தலைவர் எப்சிபா தவராஜ் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் லெனின் பிரபாகர் விருந்தினர்களை கவுரவித்தார். போதகர் ரவுஷன் பிரபாகர் பங்கேற்று புத்தாண்டு நற்செய்தி வாசித்தார். துதிசேனை சபை போதகர் சார்லி வாழ்த்தி பேசினார்.
வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். ஓயாசிஸ் சிறப்புப்பள்ளி ஆசிரியை பிரதிக் ஷா வரவேற்றார். தொண்டு நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் உள்ள மாணவர்கள், இல்லவாசிகள், பயனாளிகள் உள்ளிட்டோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. ஓயாசிஸ் சிறப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி, பொம்மலாட்டம் உள்ளிட்டவை நடந்தது.
ஓயாசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் ப்ளோரா தவராஜ், நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறப்பு ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

