ADDED : ஜன 02, 2026 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நாகம் பதினாறு சிலம்பக் கலைக்கூடம் சார்பில் மாவட்ட அளவிலான இன்டர்கிளப் சிலம்பம் போட்டி பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் குறிஞ்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி தாளாளர் அகிலன் செல்வம், கம்பு சண்டை போட்டியை துவக்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் சண்முகசுந்தரம், தனித்திறமை போட்டியை துவக்கி வைத்தார். இவர்கள் இருவரும் போட்டியில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசினர்.
ஆசிரியர் உதயகுமார், பயிற்சியாளர்கள் கமலேஷ்வரன், சுமதி சுப்ரமணியம், ஆண்டனி, ராமலிங்கம், அர்ச்சுனன், நாராயணசாமி, புருஷோத்தமன், தமிழ்செல்வன், வேலன் வாழ்த்தி பேசினர்.
நாகம் பதினாறு சிலம்பக் கலைக்கூடம் தலைவர் ரகுநாத் நன்றி கூறினார்.

