/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்
/
சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்
ADDED : ஜன 02, 2026 04:26 AM

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னை மெரினா பீச்சிற்கு அடுத்தப்படியாக நீளமான பீச்சாக கடலுார் சில்வர் பீச் உள்ளது.
இங்கு, வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத் துடன் வந்தனர்.
மாலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது. மணற்பரப்பில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து கடலின் அழகை ரசித்தனர். தடையை மீறி கடலில் குளித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூட்டத்தால் வண்ணாரப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் இருந்து ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
போலீசார், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

