sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

/

 குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

 குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

 குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜன 02, 2026 04:27 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன் மேல்நிலை குடிநீர் தொட்டியின் மோட்டார் பழுதானது.

அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 5:45 மணியளவில் ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஆவினங்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதனையேற்று, மாலை 6:30 மணியளவில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us