/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை மாணவர்கள் தேர்வு போட்டி துவக்கம்
/
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை மாணவர்கள் தேர்வு போட்டி துவக்கம்
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை மாணவர்கள் தேர்வு போட்டி துவக்கம்
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை மாணவர்கள் தேர்வு போட்டி துவக்கம்
ADDED : மே 08, 2025 01:31 AM

கடலுார்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் நேற்று கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 28இடங்களில் செயல்படுகிறது.
இதில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்தது.
காலை நடந்த தேர்வுப்போட்டிகளில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவர்கள், அடுத்து மாநில அளவிலான தேர்விற்கு தகுதி பெறுவார்கள். மாநில அளவுத்தேர்வு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வகுப்பு வாரியாக மே.19 முதல் மே.24 வரை நடக்கிறது. மாநில அளவிலான தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவர். மாணவிகளுக்கான கடலுார் மாவட்ட அளவுத்தேர்வு இன்று காலை நடக்கிறது.
மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் வாள்வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை விளையாட்டுகளுக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கிலும், ஸ்குவாஷ் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், பளுதுாக்குதல், உஷூ விளையாட்டுகளுக்கு தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்தியா விளையாட்டு அரங்கிலும், நீச்சல் விளையாட்டுக்கு சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்திலும், ஹேண்ட்பால் விளையாட்டிற்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கிலும், மல்யுத்தம், டேக்வாண்டோ விளையாட்டுக்கு கடலுார் அண்ணா விளையாட்டரங்கிலும், மல்லர் கம்ப விளையாட்டிற்கு விழுப்புரம் விளையாட்டு அரங்கிலும் மே.12ம் தேதி காலை 7:௦௦ மணிக்கு நடக்கிறது.