/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 07, 2025 05:53 AM
கடலுார், : தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாயிலாக தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து 'தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்' என்ற தலைப்பில் 6 மாத கால சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள் நடைபெற உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது ஐ.டி.ஐ., படித்திருக்க வேண்டும். http://oneyearcourse.editn.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளரை 7845358815 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

