/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம்
ADDED : டிச 27, 2024 06:34 AM

மங்கலம்பேட்டை,: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசுபடுதலை தவிர்த்தல், ஆரோக்கியமான உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் சார்பில், 7 நாட்கள் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சியில் கடந்த 22ம் தேதி துவங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பயணம் திருச்சி, கொல்லிமலை, கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, விருத்தாசலம், ஆண்டிமடம், கும்பகோணம் வழியாக சென்று நாளை 28ம் தேதி மீண்டும் திருச்சியில் முடிகிறது.
நேற்று கடலுார் மாவட்டம் மங்கலம்பேட்டைக்கு சைக்கிள் பயணமாக வந்தவர்களுக்கு, சுற்றுலா துறை அலுவலர் கண்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட எல்லை முடிகின்ற கருவேப்பிலங்குறிச்சி வரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் சுற்றுப்பயண இயக்குனர் ராஜாராம் தலைமையிலான குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடு, டில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 பேர் இந்த சைக்கிள் விழிப்புணர்வு சுற்று பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

