ADDED : ஜன 14, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; சிறுபான்மை பிரிவு காங்., சார்பில் சமத்துவ பொங்கல் விழா கடலுார் துறைமுகம் பச்சாங்குப்பத்தில் நேற்று நடந்தது.
மாவட்டத் தலைவர் ரஹீம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் திலகர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கடலுார் எம்.பி., டாக்டர் விஷ்ணு பிரசாத், கலந்து கொண்டு புடவை, போர்வை வழங்கினார்.
அன்பழகன், வண்டி பாளையம் தாமோதரன் பெருமாள் வட்டாரத் தலைவர் தரணிதரன், வட்டாரத் துணைத் தலைவர் ஏழுமலை, போத்ராஜ் சந்திரன் வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், ஓ.பி.சி., மாவட்டத் தலைவர் ராமராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.