ADDED : நவ 17, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், ஊராட்சி பணிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் மூலம் ஊராட்சிகளில் 10 லட்சத்திற்கும் உள்ள சிறு சிறு பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை சிறு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக முடிவுற்ற அனைத்து பணிகளுக்கும் நிதி விடுவிக்கடவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில், கடந்த வாரம் செய்து வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, 3 மாதங்களாக அனுப்பப்படாத நிதியை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு விடுவிக்கப்பட்டது. இதனால் சிறு ஒப்பந்ததாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.