/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை குடிநீரின்றி மக்கள் தவிப்பு
/
ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை குடிநீரின்றி மக்கள் தவிப்பு
ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை குடிநீரின்றி மக்கள் தவிப்பு
ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை குடிநீரின்றி மக்கள் தவிப்பு
ADDED : ஜூலை 30, 2025 07:30 AM
நெல்லிக்குப்பம்,:  நெல்லிக்குப்பம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலமாக மக்களுக்கு காலை, மாலை என, வேளைகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஜம்புலிங்கம் பூங்கா மற்றும் நகராட்சி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக பெரும்பான்மையான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது.
இந்த இரண்டு இடங்களிலும் மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக நகராட்சி நிர்வாகம் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது. ஆனால் நகராட்சி அதிகாரிகள் ஜெனரேட்டரை இயக்காதததால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.