/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாஜி., நிர்வாகிகள் கட்சியில் மீண்டும் சேர்ப்பு
/
மாஜி., நிர்வாகிகள் கட்சியில் மீண்டும் சேர்ப்பு
ADDED : மார் 05, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட காங்., முன்னாள் நிர்வாகிகள் மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டனர்.
கடலுார் தெற்கு மாவட்ட காங்., முன்னாள் தலைவர் விஜயசுந்தரம், கடலுார் வடக்கு மாவட்ட மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக விடுவித்து கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை பிறப்பித்துள்ளார்.

