ADDED : டிச 06, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து உபரி நீர் 3,700 கன அடி நீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது.
டெல்டா பகுதியில் மழை பெய்ததால், தற்போது பாசனத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 5000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அந்த தண்ணீர் கீழணைக்கு 4,700 கன அடியாக வந்து கொண்டுள்ளது. கீழணை நீர் மட்டம் 7.5 அடியாக உள்ளது. அணையில் இருந்து வடவாறு 301 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்கால் 455 கன அடி, தெற்கு ராஜன்வாய்க்கால் 205 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. உபரி நீராக 3,700 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.