/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழணை உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து... வீணாகிறது; குமராவரம் தடுப்பணை பணி வேகப்படுத்தப்படுமா?
/
கீழணை உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து... வீணாகிறது; குமராவரம் தடுப்பணை பணி வேகப்படுத்தப்படுமா?
கீழணை உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து... வீணாகிறது; குமராவரம் தடுப்பணை பணி வேகப்படுத்தப்படுமா?
கீழணை உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து... வீணாகிறது; குமராவரம் தடுப்பணை பணி வேகப்படுத்தப்படுமா?
ADDED : ஜூலை 10, 2025 02:35 AM

கடலுார் : கொள்ளிடம் ஆற்றில் ஆதனுார்-குமாரமங்கலம் இடையே கட்டப்படும் தடுப்பணை யன்பாட்டிற்கு வராத காரணத்தால், கீழணையில் இருந்து திறந்து விட்படும் காவிரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடந்த ஒரு வாரமாக 13 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரியது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செல்லும் வழியில்தான் உள்ளது அணைக்கரை. இங்கே உள்ள கீழணை வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நான்கு மாவட்ட விவசாய நிலங்களின் பாசனத்துக்கான ஜீவநாடியாக உள்ளது.
கர்நாடக மாநிலம், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி நீர் 240 கி.மீ., மைல் கடந்து வந்து மேட்டூர் அணையை அடைகிறது. மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 188 கி.மீ., கடந்த வந்து கல்லணையை அடைகிறது. மீண்டும் கல்லணையிலிருந்து 108 கி.மீ., கடந்து வந்து கீழணையை அடைகிறது. முடிவாக, கீழணையிலிருந்து 53 கி.மீ., கடந்து சென்று வங்கக்கடலில் சங்கமிக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டுள்ளது. கீழணை மூலம் கடலுார், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன. இக்கீழணையில் ஏற்படும் வெள்ளக் காலங்களில் 4.50 லட்சம் கன அடி உச்சக்கட்ட வெள்ளநீர் வடிகாலாக பயன்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இரண்டாகப் பிரிந்து வடக்குப் பிரிவு கொள்ளிட ஆறு, தெற்குப் பிரிவு கொள்ளிட ஆறு என அணைக்கரை என்ற கிராமத்தை தீவு போல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீ. தொலைவில் இரண்டும் சங்கமித்து பின் 53 கி.மீ., சென்று வங்கக்கடலில் கலக்கிறது.
தற்போது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கடந்த ஜூன் 15ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் முழுக்க முழுக்க பாசனத்திற்கான தண்ணீராகும். தற்போது கர்நாடகாவில் அதிகளவு மழைபெய்து வருவதால் மேட்டூருக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. நாம் போராடி பெற வேண்டிய தண்ணீர் கிடைத்தும் நாம் முறையாக பயன்படுத்தாமல் அவ்வளவும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வங்கக்கடலில் கலந்து வருகிறது.
கடந்த ஜூலை 2ம் தேதி 30000 கனஅடியும், 3ம் தேதி 22000, 4ம் தேதி 24000, முறையே நேற்று 21000 கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கலந்து வருகிறது. கடந்த 2ம் தேதி முதல் நேற்று வரை கிட்டதட்ட 13 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கடந்து வீணாகிறது. இந்த கோடை சீசனில் நமக்கு கிடைக்க கூடிய காவிரி நீர் மிகவும் அரிதானது. இந்த தண்ணீரை நாம் தேக்கி வைப்பதன் மூலம் கடலுார், நாகப்பட்டிணம் மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
ஆனால் கடலுார் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. ஆனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பட்டா நிலம் ஆற்றுப்படுகையில் அமைந்திருப்பதால் தண்ணீர் தடுத்து நிறுத்தும்போது, நிலங்கள் மூழ்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தடுப்பணையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இரு மாவட்ட விவசாயிகளும் கொள்ளிடம் தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை.