/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரியில் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
/
வீராணம் ஏரியில் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
வீராணம் ஏரியில் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
வீராணம் ஏரியில் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : ஜூலை 15, 2025 04:39 AM

சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி முழு கொள்ளவு நிரம்பியதால், பாதுகாப்பு கருதி, பூதங்குடி வி.என்.எஸ்., மதகுகள் வழியாக விநாடிக்கு 1,144 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் உள்ளது. 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., மீட்டர் அகலம் கொண்டது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். 1,465 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
காவிரி டெல்டா கடை மடை பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகா பகுதிகளில் 55,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்தாண்டு கோடையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் முதல் முறையாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
தொடர்ந்து கடும் வெயில் காரணமாக நீர் மட்டம் குறைந்தது. இதற்கிடையே, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையில் வந்து வடவாற்றின் மூலமாக வீராணம் ஏரிக்கு தற்போது, 1,215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால், இரண்டாவது முறையாக ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் வழிகாட்டுதலின் பேரில், லால்பேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூதங்குடி வி.என்.எஸ்., மதகு வழியாக விநாடிக்கு 1,144 கன அடி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
உபரி நீர் வெள்ளாறு அணை கட்டிற்கும், பாழ் வாய்க்கால் வெள்ளாற்றிற்கு அனுப்படுகிறது. சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கும் தண்ணீரை, சேத்தியாத்தோப்பு பாசனப்பிரிவு அலுவலக உதவி பொறியாளர் படைகாத்தான் தலைமையிலான பணியாளர்கள், பாசனத்திற்கு வாய்க்கால் வழியாக அனுப்பி வருகின்றனர்.

