
கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர் பழனிபாரதி, மாநில செயலாளர் கோதண்டம், பொருளாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். அல்லிமுத்து வரவேற்றார். சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம், தொகுப்பூதிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (25ம் தேதி) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்துவது, திருச்சி மாவட்ட மேலாளர் அலுவலகத்தில், 27ம்தேதி மற்றும் 30 ம் தேதி சேலம் டாஸ்மாக் மாவட்ட மேலாலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, முத்துக்குமரன், சுரேஷ், கோவிந்தராஜன், முகமதுஅலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.