நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : கடலுாரில் மாவட்ட சலவை தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் பாலன், செயலாளர் வெங்கடேசன், சம்பத்குமார், சுப்ரமணியன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நிர்வாகிகள் தேர்தல் நடந்து.
இதில், மாவட்டத் தலைவராக பாலகார்த்திகேயன், செயலாளராக ஜெகதீசன், பொருளாளராக மணி, கவுரவ தலைவராக ஜெயபால், துணைத் தலைவர்களாக தஷ்ணாமூர்த்தி, அண்ணாதுரை, துணை செயலாளர்களாக சுப்ரமணியன், பிரகாஷ், இணை செயலாளர்களாக சரவணன், பன்னீர், சட்ட ஆலோசகராக சரவணன், மகளிரணி தலைவியாக சரஸ்வதி, செயலாளராக செல்வி தேர்வு செய்யப்பட்டனர்.