/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.வெ.க., மாநாட்டிற்கு நிர்வாகிகள் அழைப்பு
/
த.வெ.க., மாநாட்டிற்கு நிர்வாகிகள் அழைப்பு
ADDED : அக் 26, 2024 06:41 AM

கடலுார்: த.வெ.க., மாநாட்டிற்கு, கட்சியினர் திரண்டு வர வேண்டும் என, கடலுார் மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர் மற்றும் ராஜ்குமார் அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை;
கோலாகலமாக த.வெ.க., அரசியல் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்கிறது. இதில் மாவட்ட, கிராம, ஒன்றிய பகுதியிலிருந்து மாநகரம், நகரம், மாணவரணி, தொண்டர் அணி, மாவட்டம், இளைஞரணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி அனைவரும் ஒன்று திரண்டு பங்கேற்று விஜய் கரத்தை வலுப்படுத்த வேண்டும். தொண்டர்கள் எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் அமைதியான முறையில் வாகனங்களில் சென்று பங்கேற்க வேண்டும். மாநாட்டிற்கு வரும்போது தொண்டர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் வைத்து வர வேண்டும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
கட்சி கொடியை கையில் ஏந்தி வாகனங்களில் வர வேண்டும். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.