ADDED : டிச 14, 2025 06:33 AM

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் இங்கர்சால் செல்லதுரை, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றினர்.
விழாவில், ஆக்சிஸ் வங்கி சென்னை மண்டல தலைமை அதிகாரி ஜெயராமன் செந்தில், குழந்தைகள் நலக்குழு முன்னாள் உறுப்பினர் இளங்கோவன், விழுப்புரம் ராக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துணை முதல்வர் செந்தில்நாதன், தமிழ்நாடு அறிவியல் மன்ற செயல் உறுப்பினர் பாலகுருநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

