தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விடுதி கட்டுமான பணி மந்தம்: விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

விடுதி கட்டுமான பணி மந்தம்: விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

விடுதி கட்டுமான பணி மந்தம்: விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு


UPDATED : ஜூன் 29, 2026 10:09 PM

ADDED : ஜூன் 29, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 10:09 PM ADDED : ஜூன் 29, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதி இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் புதிய கட்டுமான பணி துவங்காமல் கிடப்பில் உள்ளது.

சேத்தியாத்தோப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி இயங்கியது. கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதால் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனால், மாணவிகள் அச்சமடைந்தனர். இதனால், புதிதாக விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பழைய விடுதி இடிக்கப்பட்டது. தனியார் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக மாணவிகள் விடுதி செயல்படுகிறது. ஆனால், புதிய விடுதி கட்டுவதற்கான எந்த பணியும் இதுவரை துவங்காமல் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். மாணவிகள் தற்போது தங்கியுள்ள விடுதிக்கும், பள்ளிக்கும் இடையே அதிக துாரம் உள்ளதால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாடகை கட்டடத்தில் விடுதி இயங்குவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, புதிய விடுதிக்கான கட்டுமான பணிகளை உடனடியாக துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us