/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழிவுநீர் கால்வாய் பணி கிடப்பில் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
கழிவுநீர் கால்வாய் பணி கிடப்பில் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கழிவுநீர் கால்வாய் பணி கிடப்பில் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கழிவுநீர் கால்வாய் பணி கிடப்பில் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 11, 2025 07:07 AM
நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூரா ட்சியில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள கரையான் குட்டையில் சேருகிறது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை தடுக்க 1 கோடி ரூபாய் மதிப்பில் கலிஞ்சிக்குப்பம் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து பெண்ணையாற்றின் கரைக்கு எடுத்து சென்று சுத்திகரித்து ஆற்றில் விட பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, வடிகால் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் முடிக்கப்பட்டன. ஆனால், கலிஞ்சிக்குப்பத்தில் இருந்து கால்நடை மருத்துவமனை வரை வடிகால் கட்டும் பணியை முடித்தால் மட்டுமே பணி நிறைவடையும். ஆனால், இதற்கு நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்காததால் பணி கிடப்பில் உள்ளது. இதனால், இதுவரை முடிந்த கால்வாய் பணியும் பாழாகும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.