/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உளுந்து காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு
/
உளுந்து காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு
ADDED : பிப் 18, 2024 12:12 AM
கடலுார்: உளுந்து மற்றும் பச்சைப் பயறு சாகுபடிக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகள் தற்போது நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15ம் தேதியாக இருந்தது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பயிர் காப்பீடு செயிலியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இணையதளம் முடங்கியது. இதனால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது இணையதளம் சரி செய்யப்பட்டு செயல்படுகிறது. எனவே. மத்திய அரசு நெல் தரிசில் உளுந்து பச்சைப்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் 21ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.