ADDED : பிப் 04, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திருவட்டத்துறையில் கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பெண்ணாடம் அபி கண் பரிசோதனை மையம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஊராட்சி செயலர் பாலாஜி தலைமை தாங்கினார். அபி கண்பரிசோதனை மைய நிறுவனர் வரலட்சுமி தலைமையிலான குழுவினர் பொது மக்களுக்கு கண் புரை, கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கருவிழி உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். இதில், 7 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.