
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையைச் சேர்ந்தவர் ரத்தினசபாபதி. அருணா மேல்நிலைப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர். இவர் நேற்று இறந்தார்.
பெண்ணாடம் லயனஸ் கிளப் தலைவர் சக்திவேல், உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி ஆகியோர் ரத்தினசபாபதி குடும்பத்தினரை சந்திந்து கண் தானம் வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கினர். அதைத்தொடர்ந்து, குடும்ப உறுப்பினர் சம்மதத்துடன் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் தானம் செய்யப்பட்டது.
சங்க மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தம், வட்டார தலைவர் மேழிச்செல்வன், பொருளாளர் பாண்டியன், துணை தலைவர் வெங்கடேஷ்வரன், இறந்தவரின் மகன்கள் பாலசுப்ரமணியன், சக்திவேல், ஞானகணேஷ், உறவினர்கள் உடனிருந்தனர்.