
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு ஞானகுரு வித்யாலயா பள்ளி நிறுவனர் கோடி துவக்கி வைத் தார். பள்ளி தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார்.
கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். 47 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளி நிர்வாக அலுவலர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வேல்முருகன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.