
விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஜெயின் ஜூவல்லரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் விருத்தாசலம் அரிமா சங்கம் ஆகியன சார்பில், 99வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
அரிமா சங்க தலைவர் சுந்தர்ராஜ், நகர வர்த்தகர்கள் நல சங்க தலைவர் கோபு ஆகியோர் தலைமை தாங்கினர். � ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் சுபாஷ் சந்திரபோஸ், முதல் துணை ஆளுனர் ராஜ சுப்ரமணியன், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி, முன்னாள் ஆளுனர் கல்யாண்குமார், கமல் கிேஷார் ஜெயின் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
அரிமா சங்க செயலர்கள் முத்து, நாராயணன், கே.எஸ்.ஆர்., பொறியாளர் ரஞ்சித், பொருளாளர் ரகுராமன், வர்த்தகர் சங்க செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது, மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், இளைஞரணி நிஷாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.