/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிவராகநல்லுாரில் கண் சிகிச்சை முகாம்
/
ஆதிவராகநல்லுாரில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜன 26, 2025 05:24 AM

புவனகிரி  புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம், பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் பவர் பிளான்ட் நிறுவனம் இணைந்து, புவனகிரி அருகே ஆதிவராகநல்லுாரில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் தி.மு.க., கிளை செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப பிரிவு சுதாகர் வரவேற்றார்.
பரங்கிப்பேட்டை பவர்பிளான்ட் அதிகாரிகள் குகன், சதீஷ் விஜயகுமார், ஹரி முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில்ராஜா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி டாக்டர் சஞ்சய் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர், சிகிச்சை அளித்தனர். பவர் பிளான்ட் பி.ஆர்.ஓ., சம்பத் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

