/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண் சிகிச்சை முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
கண் சிகிச்சை முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 14, 2025 11:34 PM

கடலுார் : முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, கடலுார், முதுநகர் சிங்காரதோப்பு மாநகராட்சி துவக்கப் பள்ளியில், இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாம் ஏற்பாடுகளை டாக்டர் பிரவீன் அய்யப்பன் செய்திருந்தார்.முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது.
கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச அறுவைசிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள்ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், பிரகாஷ், வார்டு அவைத்தலைவர் ராமநாதன், துறைமுகம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், கிராம நிர்வாகிகள் நடராஜன், நாகூரான், முன்னாள் கவுன்சிலர்கள் சம்பத்,பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.