
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில், கோவை சங்கரா கண் மருத்துவமனை, கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண்மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு பள்ளி நிறுவனர் கோடி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அய்யாதுரை வரவேற்றார். கோவை சங்கரா கண் மருத்துவமனை, மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆலோசனை பெற்றனர்.

