சிதம்பரம், சிதம்பரத்தில், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்த முகாமிற்கு, காஸ்மோபாலிட்டன் சங்க தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். ராஜம் அரவிந்தன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சாஸ்தா மணிகண்டன் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பஞ்சநதம், முகாமை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் சந்தீப், ஸ்ருஜாத்தி, ஸ்ரீயா, நிஷாந்த், ஓஜுஸ், திருவேங்கடம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 368 பேருக்கு கண் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர். 138 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளி நிர்வாகி பாலசுப்பிரமணியன் இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். இளையராஜா, மணிகண்டன், பாண்டியன், ராமச்சந்திரன், சமுத்திரராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்க பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

