
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மஹாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 100 வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஜெயின் ஜூவல்லரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் விருத்தாசலம் ேஹாஸ்ட் அரிமா சங்கம் ஆகியன முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அரிமா சங்க தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த் முன்னிலை வகித்தனர். சீர்காழி ஹரக்சந்த் போரா குத்துவிளக்கேற்றி, முகாமை துவக்கி வைத்தார்.
அரிமா சங்க முதல் துணை ஆளுநர் சாலை கனகதாரன், இரண்டாம் துணை நிலை ஆளுநர் கமல் கி ேஷார் ஜெயின், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி, முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கல்யாண்குமார், முரளி, ஜோதிடர் வித்யாதரன், சேவை திட்ட செயலர் ரஞ்சித், அரிமா சங்க செயலாளர் முத்து நாராயணன், பொருளாளர் ரகுராமன், முன்னாள் தலைவர் அருள், செயலர் சந்திரசேகர், கே.எஸ்.ஆர்., செயலாளர் சுந்தரவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், 500க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 300க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

