
விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
விருத்தாசலம் அரிமா சங்கம் ஹோஸ்ட், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அரிமா சங்க தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார்.
� ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் குப்புசாமி, முரளி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
சுந்தரராஜன், முத்து நாராயணன், இன்ஜினியர் செல்வராசு, சபாநாதன், ராமலிங்கம், அசோக்குமார், தமிழ்மணி, உமா அம்பலநாதன், சோகன்லால், ராஜகோபால், ரமேஷ், ஆசிரியர் பிரபாகர் பங்கேற்றனர். பொருளாளர் பாலு நன்றி கூறினார்.