ADDED : செப் 15, 2025 02:25 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, லயன்ஸ் கிளப், நாளா கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சங்கரா கண் மருத்துவமனை, சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீமுருகவிலாஸ் ஜூவல்லரி ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
லயன்ஸ் மற்றும் நாளா கிளப் தலைவர்கள் குமரேசன், அருள்செல்வி தலைமை தாங்கினர்.
மாவட்ட தலைவர்கள் செங்கோல், அபிராமி, ஜெயவேல்,பூவராகமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
முதல் துணை ஆளுநர் சாலை கனகதாரன் முகாமை து வக்கி வைத்தார்.
சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர்கள் ஜவகர் நாராயணசாமி, வேல்முருகன், செயலாளர்கள் இளஞ்செழியன், கோவிந்தராஜ், பொருளாளர் ராமச்சந்திரன், ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 293 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், 60 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.