ADDED : ஏப் 15, 2025 07:38 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தில் சாந்தினிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, பி.என்.பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் வி.சி., கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் அக்ரிமென்ட் போட்டு பயிர் செய்து வருகிறார்.
இந்நிலையில், அந்த அக்ரிமெண்ட் செல்லாது என அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் கூறியதால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று மாலை நெல்லிக்குப்பம் போலீசில் இரண்டு கோஷ்டியினரிடமும் விசாரனை நடந்தது. அப்போது இரு கோஷ்டியினரும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையிலேயே வாக்குவாதம் செய்தனர். வெளியே வந்தவர்கள் போலீஸ் நிலையத்திலேயே தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.