/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க.,வில் 'கோஷ்டி' பூசல் வெட்ட வெளிச்சம்
/
தி.மு.க.,வில் 'கோஷ்டி' பூசல் வெட்ட வெளிச்சம்
ADDED : நவ 26, 2025 08:03 AM
நெ ல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரும், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணனும், இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர்.
அமைச்சர் கணேசன் 8 மாதங்களுக்கு முன் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவர் முன்னிலையிலேயே இருதரப்பு ஆதரவாளர்களும் வாய் தகராறில் ஈடுபட்டதால் அந்த முயற்சியை கைவிட்டார்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளுக்கு இரு தரப்பினரும் நகரம் முழுவதும் போட்டி போட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களில் நகர செயலாளர் மணிவண்ணன் படமோ பெயரோ இடம் பெறவில்லை.
அதேபோல மணிவண்ணன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களில் சேர்மன் ஜெயந்தி, ராதாகிருஷ்ணன் படமோ, பெயரோ இடம் பெறவில்லை. இதன் மூலம் நெல்லிக்குப்பம் தி.மு.க., கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

