ADDED : மே 22, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில், கணவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் முதுநகர் அடுத்த அன்னவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்,29; இவருக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த மீரா,29; என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மீரா, 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். மனைவி பிரிந்து சென்ற மனவருத்தத்தில் இருந்த கிருஷ்ணராஜ், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.