/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டாவில் பெயர் நீக்கம் குடும்பத்தினர் உண்ணாவிரதம்
/
பட்டாவில் பெயர் நீக்கம் குடும்பத்தினர் உண்ணாவிரதம்
பட்டாவில் பெயர் நீக்கம் குடும்பத்தினர் உண்ணாவிரதம்
பட்டாவில் பெயர் நீக்கம் குடும்பத்தினர் உண்ணாவிரதம்
ADDED : நவ 24, 2024 05:20 AM

சேத்தியாத்தோப்பு, : பட்டாவில் பெயர் நீக்கியதை கண்டித்து வி.ஏ.ஓ., அலுவலகம் முன் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னக்குப்பத்தை சேர்ந்த சாரங்கபாணி மகன்கள் மணிக்கண்ணன், வெற்றிச்செல்வன் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் நேற்று காலை 11.00 மணிக்கு வீரமுடையாநத்தம் வி.ஏ.ஓ.. அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த புவனகிரி தாசில்தார் தனபதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை செய்தார். அதில், பட்டாவில் இருந்து தங்கள் குடும்ப பெயர்களை வி.ஏ.ஓ., பரிந்துரை செய்து நீக்கியதை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதாக கூறினர்.
அவர்களிடம் ஆவணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாரங்கபாணி குடும்பத்தினர் மாலை 4:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

