/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயி தாக்கு: மூவர் மீது வழக்கு
/
விவசாயி தாக்கு: மூவர் மீது வழக்கு
ADDED : ஜன 05, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே முன்விரோதத்தில் விவசாயியை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புவனகிரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே, இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இதன் காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டது. அப்போது, கருணாநிதி, அவரது மனைவி மங்கையர்கரசி, மகன் சுரேந்தர் ஆகியோர் சேர்ந்து சுரேந்திரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இகுறித்து சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் கருணாநிதி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.