/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாடா ஏஸ் மோதி விவசாயி கால் முறிவு
/
டாடா ஏஸ் மோதி விவசாயி கால் முறிவு
ADDED : மார் 25, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி தாலுகா மருதுார் அருகே முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை,55; விவசாயி. நேற்று முன்தினம், பஸ்சில் இருந்து இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனம் மோதியது. இதில், அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் இருவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின்பேரில் மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.