/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி சாவு
/
தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி சாவு
ADDED : பிப் 07, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே இளநீர் பறிக்க மரத்தில் ஏறியவர் கீழே விழுந்து இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 35; விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள உறவினரின் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன் மரத்திலிருந்து தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மணிகண்டன் உடலை கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் மணிகண்டன் மனைவி புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.