ADDED : அக் 23, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : எடையூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 60. விவசாயி. இவர் நேற்று மாலை தனது நிலத்தில் விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், மின்னல் தாக்கி நாராயணசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

