/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உழவரைத் தேடி திட்டம் குமராட்சியில் துவக்கம்
/
உழவரைத் தேடி திட்டம் குமராட்சியில் துவக்கம்
ADDED : மே 30, 2025 05:56 AM

கடலுார்: குமராட்சி வட்டாரத்தில் 'உழவரைத் தேடி' திட்டம் துவக்க விழா நடந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு கிராமங்களில் 'உழவரைத் தேடி' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனையொட்டி குமராட்சி வட்டாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் காணொளிக் காட்சி மூலம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
குமராட்சி வட்டாரத்தில் கீழபருத்திக்குடி, மாதர்சூடாமணி கிராமங்களில் எல்.இ.டி.,திரையிடப்பட்டு திட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல் தலைமையில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கலைச்செல்வி, கால்நடை உதவி மருத்துவர் ஆனந்தசேகரன், வேளாண் அலுவலர் சிந்துஜா, உதவி பொறியாளர் கமல சுபாஷினி, தோட்டக்கலை அலுவலர் கோகுலக்கண்ணன், துணை வேளாண் அலுவலர் தெய்வசிகாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
வேளாண் துறை மற்றும் சார்பு துறைகளின் திட்டங்கள், நவீன் தொழில்நுட்பங்கள், விதை நேர்த்தி செயல்விளக்கம், கள பிரச்சினைக்கான ஆலோசனைகள், மானிய இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.