நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே வயிற்று வலியால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு வழுதலம்பட்டை சேர்ந்தவர் செல்வநாயகம், 55; விவசாயி.
இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது.
இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம், முந்திரி பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.