UPDATED : ஆக 31, 2026 10:03 PM
ADDED : ஆக 31, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
வடலூர்:நோய் அவதி தாங்காமல் பூச்சிமருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்
வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,54; விவசாயி. உடல் நிலை பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார். நோயின் தாக்கம் அதிகமாகவே விரக்தியடைந்த செல்வகுமார், தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை, குடும்பத்தார் மீட்டு, நெய்வேலி தனியார் மருத்துவமனையிலும், பின்னர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
