/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திடீர் மழையால் விவசாயிகள் பாதிப்பு
/
திடீர் மழையால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : பிப் 02, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி பகுதியில் நேற்று காலை திடீரென பெய்த மழையினால் சம்பா அறுவடை செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில் சம்பா அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து இடம் பிடித்து வருகின்றனர்.
அத்துடன் சில இடங்களில் அறுவடையும் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று திடீரென பெய்த மழையில், நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.