/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பு
/
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : நவ 28, 2025 04:55 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகர விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்ற னர்.
இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றன. இவற்றை, நிலம் இல்லாதவர்களும் தவறாக பயன்படுத்தி அரசு மானியங்களை பெறுவதாக புகார் எழுந்தது.
இதுபோன்ற தவறுகள் நடக்காமல் உண்மையான விவசாயிகள் மட்டும் பயன் பெறும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கபடுகிறது. இந்த தனித்துவ அடையாள எண் உள்ள விவசாயிகள் மட்டுமே மானியங்களை பெற முடியும். ஆனால், இந்த அடையாள எண்ணை, நெல்லிக்குப்பம் நகராட்சியில் நிலம் வைத்துள்ளவர்களால் பெற முடியவில்லை.
தற்போது சம்பா பட்டத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர். நகர பகுதி விவசாயிகளுக்கு அடையாள எண் இல்லாததால் காப்பீடு செய்ய முடியவில்லை.
நகர விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாததால் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டால் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரியுள்ளனர்.

