ADDED : நவ 28, 2025 04:56 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.
பேருராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், நகர செயலாளர் முனவர் உசேன், முன்னாள் துணை சேர்மன் செழியன், மாவட்ட பிரதிநிதி சங்கர், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு, பால், பிரட், பிஸ்கட்டுகளை, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் வழங்கினார். விழாவில், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், நகர அவைத்தலைவர் தங்கவேல், முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், கவுன்சிலர்கள் தையல்நாயகி கணேசமூர்த்தி, ராஜகுமாரி மாரியப்பன், யாஸ்மின் நிகார் அஜீஸ் முகமது, நகர தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில், நிர்வாகிகள் கோவிந்தராஜ், புருஷோத்தமன், கோமு, சரவணன், செந்தில்குமார், விஜய், லலிதா, அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

