/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் அருகே டிரான்ஸ்பார்மர் பழுது; நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை
/
பெண்ணாடம் அருகே டிரான்ஸ்பார்மர் பழுது; நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை
பெண்ணாடம் அருகே டிரான்ஸ்பார்மர் பழுது; நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை
பெண்ணாடம் அருகே டிரான்ஸ்பார்மர் பழுது; நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை
ADDED : நவ 02, 2024 07:10 AM

பெண்ணாடம் : டிரான்ஸ்பார்மர் பழுதால் சம்பா நடவு செய்த நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் சம்பா நெல் சாகுபடி பணி துவங்குவது வழக்கம்.
பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம், துறையூர் பகுதியையொட்டி உள்ள 30 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் போர்வெல் பாசனம் மூலம் சம்பா நடவுப்பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 29ம்தேதி கொசப்பள்ளம் எஸ்.எஸ். 3, 100 கே.வி.ஏ., திறனுடைய டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து பழுதானது. பழுதான டிரான்ஸ்பார்மரை மின் வாரியம் இதுவரை சீரமைக்கவில்லை.
இதனால் பெரியகொசப்பள்ளம், துறையூர் கிராம பகுதிகளில் நடவு செய்த 30 ஏக்கர் பரப்பிலான நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் வயல்கள் வெடிப்போடி வருவதால் கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, துறையூர் விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் மோட்டார் பாசனம் மூலம் நாற்று விட்டு, நடவு செய்தோம். இங்குள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் 11 பாசன போர்வெல் மோட்டார்கள் மின்சாரம் பெறுகின்றன. 3 நாட்களுக்கு முன் டிரான்ஸ்பார்மர் பழுதானது.
சீரமைக்க மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் இதுவரை சீரமைக்கவில்லை. வயல்கள் காய்ந்து வெடிப்விட துவங்கியுள்ளது' என வேதனையுடன் தெரிவித்தனர்.