sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயிகள் வரும் 11ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம்

/

விவசாயிகள் வரும் 11ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம்

விவசாயிகள் வரும் 11ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம்

விவசாயிகள் வரும் 11ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம்


ADDED : நவ 06, 2025 05:16 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ரபி பருவத்திற்கு விவசாயிகள் வரும் 11ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

க டலுாரில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றைக் கொண்டு, இ-சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும், பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள் ளலாம்.

அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப் படையில் பயிர்காப்பீடு திட்டத்தில் சேரலாம்.

பயிர்க்கடன், வேளாண் நகைக்கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர்காப்பீடு திட்டத்தில் சேரலாம்.

பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் (அ) இ அடங்கல், ஆதார் அட்டை நகல், ஆதார் எண் இணைக்கப்பட்ட மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவை தேவையா ன ஆவணங்களாகும்.

அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்கள் ஆகிய மையங்களில் பயிர் காப்பீட்டிற்கு கட்டணம் செலுத்தலாம்.

பயிர் காப்பீடு செய்ய ஏக்கர் ஒன்றுக் கு சம்பா நெற்பயிருக்கு 564 ரூபாயும், பருத்திக்கு 449 ரூபாயும், உளுந்திற்கு 255 ரூபாயும் செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்ய சம்பா நெல் , பருத்தி, உளுந்திற்கு வரும், 15ம் தேதி கடைசியாகும். இதுகுறித்த சந்தேகங்களுக்கு, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us