ADDED : நவ 06, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: வயலில் இறந்து கிடந்த முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கிளிமங்கலம் மயானத்துக்கு செல்லும் வழியில் முதியவர் ஒருவர், நேற்று காலை இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று விசாரித்தனர்.
அப்போது அவர், முருகன்குடியை சேர்ந்த வேலாயுதம் மகன் ஆறுமுகம், 65; என தெரிந்தது.
மேலும், நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்றவர் வீடு திரும்பி வராதது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

