/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 22, 2025 07:07 AM

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு சுற்று பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வேர்க்கடலை காயவைக்க உலர்களம் அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம், கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது வேர்க்கடலை அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட வேர்க்கடலை பயிர்களை காயவைக்க பல கிரமங்களில் உலர் களம் இல்லாததால் விவசாயிகள், குமளங்குளத்தில் இருந்து கொடுக்கன்பாளையம் செல்லும் சாலையில் காய வைத்து வருகின்றனர்.இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஒரு பகுதி வழியாக மட்டுமே செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கிராமங்களில் வேர்க்கடலை உலர்களம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.